/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் வகுப்புகள் துவக்கம்
/
எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் வகுப்புகள் துவக்கம்
ADDED : நவ 05, 2024 06:09 AM

கோவை; எஸ்.என்.எஸ்., கல்விக்குழுமங்களின் கீழ், பார்மஸி, பிஸியோதெரபி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் துவக்க விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இதில், மாணவர்களின் திறன் மேம்பாடு முக்கியத்துவம் குறித்தும், கல்லுாரி நாட்களை முழுமையாக சரியான வழியில் பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
கல்வி மற்றும் பிற பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில், எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், எஸ்.என்.எஸ்.சி.டி., முதல்வர் செந்துார் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பார்மஸி ஹெல்த் சயின்ஸ் முதல்வர் சதிஷ்குமார், பிஸியோதெரப்பி கல்லுாரி முதல்வர் ராஜா செந்தில், நர்சிங் கல்லுாரி முதல்வர் கவிதா, பேராசிரியை சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.