UPDATED : ஜூலை 04, 2026 07:48 PM
ADDED : ஜூலை 04, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்வர்கா பவுண்டேஷன் மற்றும் இன்னர் வீல் அமைப்பு சார்பில் கோவை ரயில்வே ஸ்டேஷன் பயணிகளுக்கு, ஏழு வீல் சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக இந்த வீல் சேர்களை வழங்கி சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னா லால் பேசுகையில்,''இந்த வீல் சேர்கள் கோவை ஸ்டேஷன் மட்டுமின்றி மற்ற ஸ்டேஷன்களிலும் அதிகரிக்கப்பட வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயணத்தை இது எளிதாக்கும்,'' என்றார்.
இன்னர் வீல் அமைப்பின் நிர்வாகிகள் பான்சால் சா, பத்மபிரியா, ஷோபனா, ஸ்வர்கா பவுண்டேஷன் அறங்காவலர் சொர்ணலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
