/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்களுக்கு புத்தாக்கம்
/
ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்களுக்கு புத்தாக்கம்
ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்களுக்கு புத்தாக்கம்
ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்களுக்கு புத்தாக்கம்
ADDED : ஆக 29, 2025 10:05 PM

கோவை, ; பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க திட்டம், கல்லுாரி கலையரங்கில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
தலைமை விருந்தினரான, கோவை 'திங்க் டெக் சொல்யூஷன்ஸ்' நிர்வாக இயக்குனர் பிரகாஷ் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''அடையக்கூடிய யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்தால் வெற்றி நிச்சயம். ஆர்வம் அனைத்து புதுமைகளுக்கும் தாய். ஆர்வத்துடன் புதிய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்லுாரியின் முன்னாள் மாணவியான, சென்னை விப்ரோ டெக்னாலஜிஸின் மூத்த மேலாளர் ஜோசபின், மாணவர்களிடம் தனது வெற்றிக் கதையை பகிர்ந்து கொண்டார்.
தரவரிசை பெற்றவர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு துறைகளில் மாணவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டன. கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.