ADDED : ஜூன் 07, 2026 09:23 AM

கோவை: இந்திய மற்றும் ஜெர்மன் புத்தாக்கச் சூழல் அமைப்புகளை இணைக்கும் நோக்கில், ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையில் இந்தோ--ஜெர்மன் புத்தாக்க ஸ்டுடியோ திறந்து வைக்கப்பட்டது. ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலை வேந்தர் மதன்செந்தில் தலைமை வகித்தார்.
ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலை மற்றும் ஏஐசி ரைஸ், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்துடன் இணைந்து ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது.
பி.எம்.ட.பிள்யூ., குழுமத்தின் சென்னை ஆலையின் நிர்வாக இயக்குனர் தாமஸ் டோஸ் இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான பகிரப்பட்ட பொறியியல் நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ரூட்ஸ் குழும நிறுவனங்களின் பெருநிறுவன உறவுகள் இயக்குனர் சந்திரசேகர், ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
