UPDATED : ஜூன் 29, 2026 10:03 PM
ADDED : ஜூன் 29, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவியருக்கான புத்தாக்க பயிலரங்கு நடந்தது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசுகையில்,''எதிர்காலத்தில் வாழ்க்கைக் கடலில் சவால்களைச் சந்திக்க வல்லமை மிக்கவர்களாக இருக்க ஆக்கப்பூர்வமானதாக கல்லுாரிக்காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், '' என்றார்.
முதல்வர் சித்ரா, கல்லுாரியின் சாதனைகளையும் பல்வேறு துறைகளில் மாணவியர் பெற்ற வெற்றிகளையும் விளக்கினார்.
