/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநெல்வேலியில் உயிரிழந்த இளைஞர் சிறுமுகையில் விசாரணை
/
திருநெல்வேலியில் உயிரிழந்த இளைஞர் சிறுமுகையில் விசாரணை
திருநெல்வேலியில் உயிரிழந்த இளைஞர் சிறுமுகையில் விசாரணை
திருநெல்வேலியில் உயிரிழந்த இளைஞர் சிறுமுகையில் விசாரணை
ADDED : ஜன 02, 2026 05:17 AM
மேட்டுப்பாளையம்: திருநெல்வேலியில் உயிரிழந்த இளைஞர் குறித்து, மேட்டுப்பாளையம், காரமடை சிறுமுகை பகுதிகளில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கடந்த 29ம் தேதி கிணற்றில் குளித்த போது, சுமார் 35 வயது மதிக்கதக்க கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு, உடன் பணிபுரிந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
அவரது பெயர் கௌதம் என்றும், சொந்த ஊர் கோவை என்பதும் மட்டுமே தெரிய வந்தது. கெளதம், தனக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என சக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கெளதம் குறித்து தகவல் கிடைக்குமா என விசாரித்து வருகின்றனர்.--