/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லி தெளிப்பு; விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
/
'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லி தெளிப்பு; விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லி தெளிப்பு; விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லி தெளிப்பு; விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
ADDED : அக் 18, 2024 10:23 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், 'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லி தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு வேளாண் துறையில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டு லாபகரமான பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு அடர் நடவு முறை சாகுபடிக்கு விதைகள், உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பூச்சி,நோயை கட்டுப்படுத்தத் தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஆளில்லா வான்வெளி வாகனம் அல்லது தெளிப்பான் (ட்ரோன்) வாயிலாக, பூச்சிகொல்லி தெளிக்க ஒரு ஹெக்டேருக்கு, 1,250 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் செயல்விளக்கம் புரவிபாளையத்தில் நடந்தது. இதில், கோவை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடாச்சலம் மற்றும் கோவை வேளாண் துணை இயக்குனர் விஜயகல்பனா மற்றும் துணை வேளாண் அலுவலர் முருகன், உதவி வேளாண் அலுவர் ஷேக்அமீர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஒரு டேங்குக்கு, 500 ரூபாய் வீதம், சுமார், 5-6 டேங்க் பூச்சி மருந்து ஒரு ஹெக்டேருக்கு தெளிக்கப்பட்டது. 'ட்ரோன்' வாயிலாக பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பூச்சிக்கொல்லியின் செயல்திறன் கூடுவதுடன், ஆட்கூலி, நேரம், தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், பூச்சிக்கொல்லி பயன்பாட்டு அளவும் குறைகிறது, என, வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.