/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த இரும்பு தடுப்புகள் மாற்றியமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த இரும்பு தடுப்புகள் மாற்றியமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த இரும்பு தடுப்புகள் மாற்றியமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த இரும்பு தடுப்புகள் மாற்றியமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2026 05:52 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவில் இருந்து கோதவாடி பிரிவு வரை சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் இரும்பு தடுப்புகள் பல இடங்களில், வாகன விபத்தால் சேதமடைந்து காணப்படுகிறது.
இதில், ஒரு சில பகுதியில் சேதமடைந்த தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. சில இடத்தில் உள்ள தடுப்புகளில் இருக்கும் இரும்பு கம்பிகள் வளைந்து, சர்வீஸ் ரோட்டில் நீட்டியபடி இருக்கிறது.
இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இந்த சர்வீஸ் ரோட்டில் புதிதாக பைக்கில் வரும் நபர்கள் கவனத்துடன் செல்லாவிட்டால், காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது மட்டுமின்றி, இந்த சர்வீஸ் ரோட்டை இருவழிப்பாதையாகவும் பயன்படுத்துவதால் வாகன ஓட்டுநர்கள் கவனத்துடன் வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சேதமடைந்த தடுப்புகளை அகற்றம் செய்து, புதிதாக இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

