ADDED : ஜூன் 18, 2026 08:07 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொதுகுழு கூட்டம், அன்னுாரில் நடந்தது.
தமிழக அரசு, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, முழுமையாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரியத்தில் காலியாக உள்ள, 80 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவ படியை, 300 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவராக தாமோதரன், உப தலைவராக பரமசிவம், செயலாளராக கணபதி, இணை செயலாளராக ராபர்ட் ராஜ் உட்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
