/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 11:18 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் வெளியேறியது. இதையடுத்து, பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் துவங்கப்பட்டது முதலே எழுந்த பிரச்னைகளால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதில், போக்குவரத்து நிறைந்த ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழியில் இருந்து மலக்கழிகவுகளும் வெளியேறி கடைகள் முன் தேங்குவதால் அவ்வழியாக செல்வோர், கடைக்காரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் உள்ள ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
நேற்று, நகராட்சி மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் அக்குழியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழியின் மீது இருந்த கழிவுகளை நீர் ஊற்றி சுத்தப்படுத்திய பின், துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், 'அடிக்கடி ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
கடந்தாண்டு, இதற்காக போராட்டம் நடத்தியும் தற்காலிக தீர்வு மட்டுமே காணப்பட்டது. இங்குள்ள குழியில் இருந்து அவ்வப்போது கழிவுநீர் வெளியேறுவது தொடர்கிறது.அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.

