தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு பணி ஜரூர்

 ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு பணி ஜரூர்

 ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு பணி ஜரூர்


ADDED : மார் 12, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.

கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின், மாவட்ட அளவில், 3,524 ஓட்டு சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆய்வை, வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியின் ஜக்குபந்தி, தண்ணீர் வசதி, மின்சாரம், பேன், ஸ்விட்ச் பாக்ஸ், மாற்றுத்திறனாளிகள் தாராளமாக வந்து செல்ல சாய்வு தளம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

ஓட்டு சாவடி கட்டடம் பழுதாகி உள்ளதா, அவ்வாறு இருந்தால் வேறு கட்டடத்துக்கு மாற்றியமைக்க அறிவுரை வழங்கினர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தால், இதுகுறித்து அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, பணிகளை விரைவுபடுத்த உரிய அறிவுரை வழங்கினர்.

பதட்டமான ஓட்டு சாவடிகளில் கூடுதல் கேமராக்களை நிறுவ, கணக்கெடுப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us