/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போதிய ஓய்வில்லாமல் வாகனங்களை இயக்காதீர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
/
'போதிய ஓய்வில்லாமல் வாகனங்களை இயக்காதீர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
'போதிய ஓய்வில்லாமல் வாகனங்களை இயக்காதீர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
'போதிய ஓய்வில்லாமல் வாகனங்களை இயக்காதீர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 06:36 AM
கருமத்தம்பட்டி : போதிய ஓய்வு இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டாம், என, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கணியூர் சுங்க சாவடியில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன் பேசியதாவது:
விபத்துக்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது ஓட்டுனர்களின் கைகளில் தான் உள்ளது. ரோட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் குடும்பம் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிகளை அறிந்து அதை கடைபிடிக்க வேண்டும். வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.வாகனங்களை முறையாக பராமரித்தாலே விபத்துகள் ஏற்படுவதை தடுக்கமுடியும். செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டினால் விபத்து நடப்பது நிச்சயம்.
மது அருந்திவிட்டு ஓட்டுவது அதைவிட அபாயகரமானது. மேலும் போதிய ஓய்வு இல்லாமல் ஓட்டுவதும் விபத்தை ஏற்படுத்தும். அதனால், விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டுவது அவசியம்
இவ்வாறு, அவர் பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செந்தில்குமார், ஆய்வாளர்கள் விஸ்வநாதன், சண்முகசுந்தரம், விஜயகுமார், செந்தில் ராம் ஆகியோர் பங்கேற்று பேசினர். ராயல் கேர் மருத்துவமனை மருத்துவ குழுவினர், 200 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு கண், ரத்தம் உள்ளிட்ட உடற்பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சாலை விபத்து நடந்தால், பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என, ஓட்டுனர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். போக்குவரத்து விதிமீறினால் அபராதம் மற்றும் தண்டனை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.