/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுரிபாளையம் ரோட்டை விஸ்தரிக்க நில பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
/
சவுரிபாளையம் ரோட்டை விஸ்தரிக்க நில பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
சவுரிபாளையம் ரோட்டை விஸ்தரிக்க நில பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
சவுரிபாளையம் ரோட்டை விஸ்தரிக்க நில பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 11:10 PM
கோவை; கோவையில், சவுரிபாளையம் ரோட்டை விஸ்தரிக்க, தேவையான நிலம் கையகப்படுத்த, மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியல் கேட்டு இரண்டு மாதமாகி விட்டது. இத்தகவல் அறிந்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், விரைந்து பட்டியல் தயாரிக்க, நகரமைப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சவுரிபாளையம் ரோட்டில் மகாலட்சுமி கோவில் முதல் சவுரிபாளையம் பஸ் ஸ்டாப் வரை உள்ள சாலையை, 50 அடி சாலையாக விஸ்தரிப்பு செய்யும் பணி, 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள, மாநகராட்சியால் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நில ஆர்ஜித அலுவலர் நியமிக்க, நில நிர்வாக ஆணையரின் அனுமதி பெற வேண்டும். இதற்கான பரிந்துரை கடிதம் அனுப்ப, மாவட்ட வருவாய் அலுவலருக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் கோரியுள்ளார். நிர்வாக அனுமதி பெற, நில நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவு அனுப்ப வேண்டியுள்ளது.
இதற்கு நிலம் எடுக்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டு, நில விபர அட்டவணை தயாரித்து அனுப்ப, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கடந்த, ஜன., 6ல் கடிதம் எழுதியிருந்தார்.
இரண்டு மாதங்களாகி விட்டது; அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், சவுரிபாளையம் ரோட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
50 அடி சாலையாக விஸ்தரிப்பு செய்வதற்கு, தேவையான நில பட்டியல் மற்றும் மதிப்பீடு தயாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க, கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரிக்கு, கமிஷனர் அறிவுறுத்தினார்.