/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
/
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : நவ 14, 2024 09:15 PM
கோவை ; பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை, ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில், ஐந்து லட்ச ரூபாய்க்கு குடும்ப மருத்துவ காப்பீடு செய்திருந்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு,63, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 2022,, மார்ச், 3 ல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார். மருத்துவ சிகிச்சைக்கான தொகை, 3.30 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், இரண்டு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தனர்.
இதற்கிடையில், சத்யாபாமாவுக்கு, அதே ஆண்டு ஜூன், 3 ல் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கான பில் தொகை, 1.21 லட்சம் ரூபாய் வழங்குமாறு கேட்டபோது, விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதனால் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், 1.21 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடு, செலவு தொகை. 15,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.