/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 29வது மண்டல மாநாடு
/
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 29வது மண்டல மாநாடு
ADDED : நவ 03, 2025 12:58 AM
கோவை: பொதுக் காப்பீட்டு துறையில் முதன்மை சங்கமாக செயல்பட்டு வரும், கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின், 29வது மண்டல மாநாடு நடந்தது.
இணை செயலாளர் பாபு வரவேற்றார். நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து, வலுவான ஒரு நிறுவனத்தை உடனடியாக உருவாக்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 1995ம் ஆண்டு பென்ஷன் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், இந்திய இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதமாக உயர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் சஞ்சய்ஜா, பொதுச் செயலாளர் சதிஷ்குமார், செயலாளர் பத்மநாபன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல தலைவர் சங்கர் உட்பட, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து, திரளாக பலர் பங்கேற்றனர்.

