தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'இன்டெக்' கண்காட்சி இன்று துவங்குகிறது

 'இன்டெக்' கண்காட்சி இன்று துவங்குகிறது

 'இன்டெக்' கண்காட்சி இன்று துவங்குகிறது


ADDED : ஜூன் 04, 2026 08:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கொடிசியா சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 'இன்டெக் 2026' இன்று துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.

கொடிசியா வளாகத்தில் உள்ள 7 அரங்குகளிலும், காலை 10 முதல் 5 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 700க்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைகின்றன.

தமிழகம் மட்டுமின்றி 13 மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் பங்கேற்கின்றனர். ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், அதிநவீன கருவிகள், லேசர் கட்டிங் மெஷின்கள், சி.என்.சி., மெஷின்கள், துல்லிய அளவீட்டுத் தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் பேக்டரி அமைப்புகள், வாகன உற்பத்தி, விண்வெளித் துறை, பொறியியல், ரசாயனத் தொழில்கள் உட்பட கோவை தொழில்துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் உபகரணங்களும், தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கண்காட்சிக்கு வர விரும்புவோர் visitor.coddisia.com என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வளாகத்திலும் பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us