/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு ஆய்வு
/
தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு ஆய்வு
தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு ஆய்வு
தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு ஆய்வு
ADDED : ஜூன் 06, 2025 12:50 AM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கேரளா வேர் வாடல் நோய் தாக்குதல் குறித்து, திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடியை விட, தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற நோய்களினால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு சாகுபடி குறைந்துள்ளது.
அதில், கேரளா வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களை விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பயிர் பாதுகாப்பு அலுவலர் முனைவர் கோவிந்தராஜ், உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர் அமுதா, தொழில்நுட்ப அலுவலர் அபின் ஆகியோர், பொள்ளாச்சி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளிடம், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, கேரளா வேர் வாடல் நோய் நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், கேரளா வேர் வாடல் நோய் தாக்குதல் அதிகம் உள்ள பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை பகுதியில் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தும், ஆய்வு செய்தும் குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் நிர்வாகம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.