/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை
/
வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை
ADDED : பிப் 22, 2024 06:07 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமைகள், வடிவமைப்புகள், மற்றும் பதிப்புரிமை பாதுகாப்பு குறித்த, இரண்டு நாள் பயிலரங்கம், பல்கலை முதுநிலை மாணவர்களுக்கு, அரங்கில் நடந்தது.
புதிய கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள், பதிப்புகளுக்கு உரிமை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மாணவர்கள் இதுகுறித்த வழிமுறைகளை தெரிந்துகொள்ளும் வகையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கண்டுபிடிப்புகளை இணையதளம் மூலம் மதிப்பீடு செய்தல், காப்புரிமை படிவம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. துணைவேந்தர் கீதாலட்சுமி, ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம், அதற்கான காப்புரிமை பெறவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.
முதுநிலை மாணவர்கள் காப்புரிமைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், முதுநிலை கல்வித்துறை தலைவர் செந்தில், இணை பேராசிரியர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.