/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழை தீவிரம்; உதவி எண்கள் அறிவிப்பு
/
வடகிழக்கு பருவமழை தீவிரம்; உதவி எண்கள் அறிவிப்பு
ADDED : அக் 30, 2024 11:42 PM

பெ.நா.பாளையம் ; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அவசரகால தொலைபேசி எண்களை நாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சி கோவனூர், ராயர் ஊத்துப்பதி, பாலமலை உள்ளிட்ட மலையடிவார பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அவசரகால தொலைபேசி எண்களை நாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில், பேரிடர் கால அவசர தொலைபேசி எண் 1077, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை, 101, ஆம்புலன்ஸ் சேவை, 108, ஊராட்சி மன்ற தலைவர், 99433 76076, துணைத் தலைவர், 94433 65688, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் 74029 05140 மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.