/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி; எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்
/
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி; எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி; எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி; எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்
ADDED : செப் 30, 2025 11:05 PM

கோவை; தமிழ்நாடு பள்ளிகளுக்கான ஹாக்கி லீக் போட்டி, இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மூன்று நாட்கள் நடந்தது. கோவை மண்டல அளவிலான போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, கரூர் மற்றும் மதுரை எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி மாணவர் அணிகள் பங்கேற்றன.
மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் நடந்த, 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையிலான இப்போட்டிகளை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.
முதல் அரையிறுதியில், மதுரை எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் மதுரை இந்திரா காந்தி பள்ளி அணியை வென்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாம் அரையிறுதியில், ஈரோடு புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தியது.
இறுதி போட்டியில், மதுரை எஸ்.டி.ஏ.டி., மாணவர் விடுதி அணி, 5-1 என்ற கோல் கணக்கில் ஈரோடு புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், மதுரை இந்திராகாந்தி பள்ளி அணி, 5-0 என்ற கோல்களில், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ்குமார் பரிசு வழங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.