/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டலங்களுக்கு இடையே கபடி; 'லீக்' முறையில் நான்கு அணி களம்
/
மண்டலங்களுக்கு இடையே கபடி; 'லீக்' முறையில் நான்கு அணி களம்
மண்டலங்களுக்கு இடையே கபடி; 'லீக்' முறையில் நான்கு அணி களம்
மண்டலங்களுக்கு இடையே கபடி; 'லீக்' முறையில் நான்கு அணி களம்
ADDED : செப் 23, 2025 11:07 PM
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு இடையேயான கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. பல்கலை வேதியியல் துறை தலைவர் இளஞ்செழியன், உடற்கல்வி துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. 'நாக் அவுட்' முதல் போட்டியில், டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியும், ஸ்ரீ ராமு கல்லுாரி அணியும் மோதின. 48-44 என்ற புள்ளிகளில் ஸ்ரீ ராமு கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் போட்டியில், காங்கேயம் அரசு கல்லுாரி அணி, 39-27 என்ற புள்ளிகளில் கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், மூன்றாம் போட்டியில் பாரதியார் பல்கலை உடற்கல்வி துறை அணி, 27-26 என்ற புள்ளிகளில், ரத்தினம் கல்லுாரி அணியையும் வென்றன.
நான்காம் போட்டியில், ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி, 32-24 என்ற புள்ளிகளில் எஸ்.ஆர்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது.
வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கும், 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. உடற்கல்வி துறை பேராசிரியர் குமரேசன், போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.