sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து; வெற்றி முனைப்புடன் பெண்கள் 'சுறுசுறுப்பு'

/

கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து; வெற்றி முனைப்புடன் பெண்கள் 'சுறுசுறுப்பு'

கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து; வெற்றி முனைப்புடன் பெண்கள் 'சுறுசுறுப்பு'

கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து; வெற்றி முனைப்புடன் பெண்கள் 'சுறுசுறுப்பு'


ADDED : செப் 30, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில், திறமையான ஆட்டத்தை வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.

காலிறுதி வரை 'நாக்-அவுட்' முறையில் நடந்த இப்போட்டியில், 18 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியானது குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரிக்கும், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரிக்கும் இடையே நடந்தது.

இதில், குமரகுரு கல்லுாரி அணி, 35-9 என்ற புள்ளிக்கணக்கில், கிருஷ்ணா கல்லுாரியை வென்றது. தொடர்ந்து, குன்னுார் புராவிடன்ஸ் கல்லுாரி, 14-6 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி அணியை வென்றது.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணி, 28-12 என்ற புள்ளி கணக்கில் ஏ.வி.பி., கல்லுாரி அணியையும், டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி அணி, 24-13 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணியையும் வென்றது.

குமரகுரு கல்லுாரி அணி, 42-5 என்ற புள்ளிக்கணக்கில், புனித ஜோசப் பெண்கள் கல்லுாரி அணியையும், புராவிடன்ஸ் கல்லுாரி அணி, 25-2 என்ற புள்ளிக்கணக்கில் கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், குமரகுரு கல்லுாரி அணி, 24-7 என்ற புள்ளிக்கணக்கில், ஊட்டி அரசு கலைக் கல்லுாரி அணியையும் வென்றது.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணி, 17-10 என்ற புள்ளிக்கணக்கில் புராவிடன்ஸ் கல்லுாரி அணியை வென்றது. நேற்று மாலையில் காலிறுதி போட்டிகள் நடந்த நிலையில், இன்று 'லீக்' முறையிலான அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. அடுத்து இறுதிப்போட்டி இடம்பெறுகிறது.






      Dinamalar
      Follow us