/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியிடையேயான கபடி போட்டி; என்.ஜி.பி., அணி முதலிடம்
/
கல்லுாரியிடையேயான கபடி போட்டி; என்.ஜி.பி., அணி முதலிடம்
கல்லுாரியிடையேயான கபடி போட்டி; என்.ஜி.பி., அணி முதலிடம்
கல்லுாரியிடையேயான கபடி போட்டி; என்.ஜி.பி., அணி முதலிடம்
ADDED : செப் 26, 2024 11:48 PM

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் என்.ஜி.பி., கல்லுாரி அணி, பாரதியார் பல்கலையை வென்று முதலிடம் பிடித்தது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(ஏ-மண்டலம்)ஆண்களுக்கான கபடி போட்டிகள், ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தன. இதில், 23 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து, முதல் அரையிறுதியில் பாரதியார் பல்கலையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணிகளும் மோதின.
ஆக்ரோஷமாக விளையாடிய பாரதியார் பல்கலை அணி வீரர்கள், 45-25 என்ற புள்ளிக்கணக்கில் சி.எம்.எஸ்., கல்லுாரி அணியை வென்றனர். இரண்டாவது அரையிறுதியில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணி, 42-32 என்ற புள்ளி கணக்கில் ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது.
இறுதிப்போட்டியில் விளையாடிய, என்.ஜி.பி., கல்லுாரி அணி, 48-28 என்ற புள்ளிக்கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்று முதலிடம் பிடித்தது. முதல் நான்கு இடங்களை பிடித்த கல்லுாரி அணியினரை உடற்கல்வி இயக்குனர்கள் பாராட்டி உத்வேகம் அளித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆதித்யா கல்லுாரி முதல்வர் அனுஜா, உடற்கல்வி துறை தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.