/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? 25ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம்
/
ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? 25ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம்
ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? 25ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம்
ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? 25ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம்
ADDED : மே 15, 2025 11:50 PM
பொள்ளாச்சி,; ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்ய விரும்புவோர், வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, கோவை மாவட்ட எஸ்.பி., தெரிவித்தார்.
கோவை மாவட்ட காவல்துறைக்கு உதவியாக, தன்னார்வமாக கோவில் மற்றும் இதர பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் ஊர்காவல் படையில் இணைந்து சேவை செய்யலாம்.
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தகுதியுடைய ஆண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் செயல்படும் ஊர்காவல் படை அலுவலகத்தில் (பழைய தாலுகா போலீஸ் ஸ்டேஷன்) வரும், 25ம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, பொள்ளாச்சி ஊர்காவல் படை அலுவலகத்தில் வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தகுதி விபரம்
வயது, 18 முதல், 45வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி, 10ம் வகுப்பு. நன்னடத்தையும், உடல் தகுதியும் உடையவராக இருக்க வேண்டும்.கோவை மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள, காவல்நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் அடிப்படையில், உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம். எந்த ஒரு குற்ற பின்னணியும் இல்லாத நபர்களாக இருக்க வேண்டும். இத்தகவலை, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திக்கேயன் அறிவித்துள்ளார்.