sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாலியல் துன்புறுத்தல் விசாரிக்கும் உள்புகார் குழு; பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு

/

பாலியல் துன்புறுத்தல் விசாரிக்கும் உள்புகார் குழு; பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு

பாலியல் துன்புறுத்தல் விசாரிக்கும் உள்புகார் குழு; பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு

பாலியல் துன்புறுத்தல் விசாரிக்கும் உள்புகார் குழு; பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு


ADDED : ஜன 02, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கல்வி நிறுவனங்களில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட உள்புகார் குழு பெயரளவில் மட்டுமே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம்,(போஸ் ஆக்ட்) 2013ல் கொண்டு வரப்பட்டது. பணியிடம் என்பது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள், விளையாட்டு பயிற்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அடங்கும்.

உடல் ரீதியாக தொடர்பு மற்றும் அதற்கான முயற்சி செய்வது, பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்துதல், ஆபாச வார்த்தைகள் பேசுவது, மொபைல் போனில் தவறான குறுஞ்செய்தி அனுப்புவது, இரட்டை அர்த்தம் கூடிய சினிமா பாடல்களை பாடுவது, ஆபாச படங்கள், வீடியோக்களை காட்டுவது, பெண்ணுடைய நடத்தை பற்றி வதந்தி பரப்புவது உள்ளிட்ட செயல்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றமாகும்.

இது போன்ற புகார்களை விசாரிக்க பணியிடங்களில் உள்புகார் குழு (ஐசிசி) அமைக்கப்பட வேண்டும். இக்குழுவின் தலைவர், ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும்.சம்பவம் நடந்து, 90 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்க வேண்டும். புகாரை விரைவு தபால் அல்லது இ-மெயில் வாயிலாக குழு தலைவருக்கு அனுப்ப வேண்டும். புகார் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விசாரணை நடைமுறை குறித்து ஐசிசி விளக்க வேண்டும்.

புகார் கிடைத்த ஆறு நாட்களுக்குள், எதிர்மனுதாரருக்கு நகல் அளிக்கப்பட வேண்டும். புகார் நகல் கிடைத்த 10 நாட்களில், எதிர்மனுதாரர் பதில் மனுவை சமர்பிக்க வேண்டும். இரு தரப்பையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும்.

விசாரணையில், புகாரில் கூறப்பட்ட சம்பவம் நிரூபிக்கப்படவில்லை என்று குழு கருதினால் புகார் தள்ளுபடி செய்யப்படும். நிரூபிக்கப்பட்டால் எதிர்மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு நிறுத்தி வைத்தல், வேலை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தண்டனை அளிக்க பரிந்துரை செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், எதிர்மனுதாரர் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யலாம்.

உள்புகார் குழு அறிக்கை அளித்த 60 நாட்களில், பரிந்துரைகளை நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக இரு தரப்பினரும், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில், 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது.

இது குறித்து, கோவை பாரதியார் பல்கலை உள்புகார் குழுவில் உறுப்பினராக இருந்த,கோவை வக்கீல் ஆர்.சண்முகம் கூறுகையில், ''பல்கலைகழகம், பள்ளி, கல்லுாரிகளில், உள்புகார் குழு கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். உள்புகார் குழுவிற்கு, மாஜிஸ்திரேட்டுக்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் உள்புகார் குழு அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. உள்புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த கல்வி நிறுவனமும் அரசுக்கு முறையாக அறிக்கை அளிப்பது இல்லை. இதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us