/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை
/
சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை
சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை
சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை
ADDED : அக் 03, 2024 08:20 PM

கோவை:
சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக மாணவர்கள் பதக்கங்களை குவித்தனர்.
புதுச்சேரியில் உலக அளவிலான சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. போட்டியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவங்கி வைத்தார்.
இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபாளம், பூடான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 6 வயது முதல், 21 வயது வரை உள்ள மாணவ - மாணவியர், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தனித்திறன் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வால், மான் கொம்பு, ஈட்டி தொடுமுறை சிலம்பம் என நான்கு பிரிவுகளில், 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் கோவை, சீரநாயக்கன்பாளையம் பீஷ்மர் குருகுலம் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ - மாணவியர் கலந்து கொண்டு, 53 தங்கப் பதக்கங்களையும், 29 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.