/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச முன்பதிவு மையம்; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
/
சர்வதேச முன்பதிவு மையம்; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சர்வதேச முன்பதிவு மையம்; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சர்வதேச முன்பதிவு மையம்; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 07, 2026 05:44 AM
வால்பாறை: அஞ்சலகத்தில் சர்வதேச முன்பதிவு மையம் துவங்கப்பட்டதை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகளை எளிதாக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் சர்வதேச முன்பதிவு மையம் துவங்கியுள்ளது.
வால்பாறை அஞ்சலகத்தில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சர்வதேச முன் பதிவு மையத்தை, போஸ்ட் மாஸ்டர் மணிவண்ணன் துவக்கி வைதார்.
அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச தபால் சேவைகளுக்காக பொதுமக்கள் நீண்ட துாரம் பயணிக்கும் சிரமத்தை குறைப்பதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும். வால்பாறை அஞ்சலகத்தில் துவங்கப்பட்டுள்ள சர்வதேச முன்பதிவு மையத்தில், எளிதான முறையில் வெளிநாடுகளுக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.
விமான தபால், சிறுபொட்டலங்கள் போன்ற அனைத்து தபால் சேவைகளையும், தபால் துறை நிர்ணயித்த கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வெளிமாநில மக்கள் அதிக அளவில் வசிக்கும் வால்பாறையில், மக்கள் இந்த சேவையை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

