/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு இன்றும் நாளையும் நேர்காணல்
/
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு இன்றும் நாளையும் நேர்காணல்
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு இன்றும் நாளையும் நேர்காணல்
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு இன்றும் நாளையும் நேர்காணல்
ADDED : டிச 18, 2025 05:20 AM
அன்னூர்: அன்னூர் தாலுகாவில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும் நடக்கிறது.
அன்னூர் தாலுகாவில், 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில், ஏழு வருவாய் கிராமங்களில் ஏழு கிராம உதவியாளர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
இவற்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பங் கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, சைக்கிள் ஓட்டி காட்டும் தேர்வு நடைபெற்றது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக நேர்காணல், அன்னூர் தாலுகா அலுவலகத்தில் இன்றும், நாளையும் நடை பெறுகிறது. இன்று 150 பேருக்கும், நாளை 155 பேருக்கும் நேர்காணல் நடை பெறுகிறது.
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தாசில்தார்கள் நேர்காணல் நடத்து கின்றனர்.