/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களை மேம்படுத்த நேரு டி.பி.ஐ., திட்டம் அறிமுகம்
/
பள்ளி மாணவர்களை மேம்படுத்த நேரு டி.பி.ஐ., திட்டம் அறிமுகம்
பள்ளி மாணவர்களை மேம்படுத்த நேரு டி.பி.ஐ., திட்டம் அறிமுகம்
பள்ளி மாணவர்களை மேம்படுத்த நேரு டி.பி.ஐ., திட்டம் அறிமுகம்
ADDED : நவ 11, 2024 04:23 AM

கோவை, : பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், நேரு கல்வி குழுமம் தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர் ஐடியா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், என்.ஜி.ஐ.,- டி.பி.ஐ., ஐடியா திட்ட தலைவருமான கிருஷ்ணகுமார், நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா தலைமை வகித்தனர்.
இந்த திட்டம், தொழில்நுட்பம், புதுமை மற்றும் சமூக காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளம் வயதினரை அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் புதுமை சிந்தனையாளர்களாக மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவை சி.டி.ஐ.ஐ.சி., தலைமை நிர்வாக அதிகாரி வினோத் குமார், டை கோயம்புத்துார் துணைத் தலைவர் பிரதீப் யுவராஜ், இளம் தொழில்முனைவேர் டெட் எக்ஸ் பேச்சாளர் கிருதிக் விஜயகுமார், விர்சுவல் ரோபோடிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விக்னேஷ்வரன், நேரு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, என்.ஜி.ஐ.,- டி.பி.ஐ.,யின் நிர்வாக இயக்குனர் வைகுண்டசெல்வன் சிறப்புரையாற்றினர்.