/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் முகவரி சரியானதா என்று விசாரணை!வீடு, வீடாக செல்லும் தேர்தல் பிரிவினர்
/
வாக்காளர் முகவரி சரியானதா என்று விசாரணை!வீடு, வீடாக செல்லும் தேர்தல் பிரிவினர்
வாக்காளர் முகவரி சரியானதா என்று விசாரணை!வீடு, வீடாக செல்லும் தேர்தல் பிரிவினர்
வாக்காளர் முகவரி சரியானதா என்று விசாரணை!வீடு, வீடாக செல்லும் தேர்தல் பிரிவினர்
ADDED : அக் 06, 2025 11:29 PM

கோவை:கோவை மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளர்களில், கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தவர்கள், அதே முகவரியில் வசிக்கின்றனரா அல்லது வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டனரா, உயிரிழந்தவர்களின் பெயர் இன்னமும் பட்டியலில் இருக்கிறதா என்கிற கள ஆய்வை, மாவட்ட தேர்தல் பிரிவு துவக்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 15,71,513 ஆண்கள், 16,44,928 பெண்கள், 688 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 32,17,129 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த, 3,117 ஓட்டுச்சாவடிகள், கடந்த லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்டன.
2024ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்கள் அதே முகவரியில் இருக்கின்றனரா அல்லது முகவரி மாற்றம் ஏற்பட்டுள்ளதா, யாரேனும் உயிரிழந்து உள்ளனரா என்ற கேள்விகளுடன், தேர்தல் பிரிவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும், 12 ஒன்றியங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர், நிலைய அலுவலர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
100 வயதை கடந்தவர்கள் மாவட்ட தேர்தல் பிரிவு நடத்திய முகாம்களில், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த ஆய்வு நடக்கிறது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு, தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளோ, பிழையோ இருக்கக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், சட்டசபை வாரியாக குறிப்பிட்ட சில இடங்களில், கள விசாரணை மேற்கொள்வோம். முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பித்தவர்கள் குறித்த தகவல் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்கிறோம்.
நமது மாவட்டத்தில், 100 வயதை கடந்த, 587 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களது முகவரிக்கு நேரில் சென்று விசாரிக்கிறோம். 80 மற்றும் 90 வயதை கடந்தவர்களின் முகவரியிலும் விசாரிக்கிறோம். யாரேனும் உயிரிழந்து இருந்தால், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.
இதுவரை கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார் தொகுதிகளில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், சில இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.