/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரணை
/
புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரணை
புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரணை
புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரணை
ADDED : ஏப் 16, 2025 10:04 PM

அன்னுார்; நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம், மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வாக, புறவழிச்சாலை அமைக்க வேண்டும், என 25 ஆண்டுகளாக, அன்னுார், கோவில்பாளையம், புளியம்பட்டி மக்கள் கோரி வருகின்றனர்.
இதற்காக, மூன்று முறை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இறுதியாக கடந்த 2023ல் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இத்திட்டம் முடங்கி இருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டம் வேகம் பெற்றுள்ளது. நிலம் கையகப்படுத்த கடந்த பிப்ரவரியில் அரசிதழில் அறிவிப்பு வெளியானது. ஆட்சேபனை உள்ளவர்கள், அறிவிப்பு வெளியானதில் இருந்து, 21 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும், என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏராளமானோர் தங்களது விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது,' என கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் (நிலம் கையகப்படுத்துதல்) ஆட்சேபனை மனு அளித்தனர். இதையடுத்து ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் அதிகாரிகள் விசாரிப்பதற்கான கூட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில், சத்தி தாலுகாவை சேர்ந்த ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் வருகிற 21ம் தேதி மதியம் 2:30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.
'இதில் நில உரிமையாளர் அல்லது அவரால் அதிகாரம் பெற்றவர் தங்கள் வசம் உள்ள ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என நில உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) தெரிவித்துள்ளார்.
'அடுத்த கட்டமாக கோவை மாவட்டத்தில், ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.