/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவியாளர் பணிக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள அழைப்பு
/
உதவியாளர் பணிக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள அழைப்பு
உதவியாளர் பணிக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள அழைப்பு
உதவியாளர் பணிக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள அழைப்பு
ADDED : அக் 06, 2025 12:04 AM
கோவை: 'கோவை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்குரிய நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான அழகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டுள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, நவ இந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேர்வு மையத்தில் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, www.drbcbe.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தை, 0422 2448308 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.