/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொந்த முதலீடு இல்லாமல் தொழில் திட்டத்தை பயன்படுத்த அழைப்பு
/
சொந்த முதலீடு இல்லாமல் தொழில் திட்டத்தை பயன்படுத்த அழைப்பு
சொந்த முதலீடு இல்லாமல் தொழில் திட்டத்தை பயன்படுத்த அழைப்பு
சொந்த முதலீடு இல்லாமல் தொழில் திட்டத்தை பயன்படுத்த அழைப்பு
ADDED : மே 23, 2025 11:45 PM
கோவை : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் வாயிலாக, கோவையில், இதுவரை 86 பேர் பயன்பெற்று, ரூ.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை, அதிகளவில் தொழில் முனைவோராக மாற்றும் வகையில், தமிழக அரசால், 2023ல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவங்கப்பட்டது.
இதில், உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, ஆயத்த ஆடை உற்பத்தி, பொறியியல் தொழில்கள், வாடகை வாகனங்கள் ஆகிய உற்பத்தி, சேவை சார்ந்த பிரிவுகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தொழில் மேற்கொண்டு வருவோரும் இதில் பயனடைய முடியும்.
உச்சபட்ச வரம்பு கிடையாது. மானியம் 35 சதவீதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக மானியமாக ரூ.1 கோடி வரை பெறலாம் என்பது, திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதில், சொந்த முதலீடு கட்டாயம் இல்லாததால், 65 சதவீதம் வங்கிக் கடனும், 35 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.
சரியாக தொகை கட்டி வந்தால், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, திட்டம் துவங்கியதில் இருந்து இதுவரை, 86 பேர் பயன்பெற்றுள்ளனர்.
கடனுதவி ரூ.18.73 கோடி, மானியமாக ரூ.10.08 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் பயனடைய, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.