/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ., ஆண்களுக்கான கபாடி போட்டி; அசத்திய இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணி
/
ஐ.பி.ஏ.ஏ., ஆண்களுக்கான கபாடி போட்டி; அசத்திய இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணி
ஐ.பி.ஏ.ஏ., ஆண்களுக்கான கபாடி போட்டி; அசத்திய இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணி
ஐ.பி.ஏ.ஏ., ஆண்களுக்கான கபாடி போட்டி; அசத்திய இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணி
ADDED : ஜன 10, 2025 12:24 AM
கோவை; பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான கபாடி போட்டியில்இந்துஸ்தான் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன்(ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் கோவை டிவிஷனிற்கு உட்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபாடி போட்டி, ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 11 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரியும், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி அணிகளும் மோதின. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்துஸ்தான் கல்லுாரி அணியினர், 48-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாம் அரையிறுதியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், 34-32 என்ற புள்ளி கணக்கில் ராமகிருஷ்ணா கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணியும், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் மோதின. முடிவில், 42-22 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. நஞ்சையா லிங்கம்மாள் கல்லுாரி மூன்றாம் இடமும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி நான்காம் இடமும் பிடித்தன.
முதல் பரிசு வென்ற மாணவர்களை இந்துஸ்தான் நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, முதல்வர் கோகிலவாணி, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.