/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முறைகேடாக குடிநீர் இணைப்பு கவுன்சிலர் எதிர்ப்பால் துண்டிப்பு
/
முறைகேடாக குடிநீர் இணைப்பு கவுன்சிலர் எதிர்ப்பால் துண்டிப்பு
முறைகேடாக குடிநீர் இணைப்பு கவுன்சிலர் எதிர்ப்பால் துண்டிப்பு
முறைகேடாக குடிநீர் இணைப்பு கவுன்சிலர் எதிர்ப்பால் துண்டிப்பு
ADDED : பிப் 10, 2024 12:44 AM
போத்தனுார்;வெள்ளலூர் பேரூராட்சியில் கட்டுமான பணி முடிவடையாத வீட்டுக்கு, முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு, கவுன்சிலர், மக்கள் எதிர்ப்பால் துண்டிக்கப்பட்டது.
வெள்ளலுார் பேரூராட்சியின், 8வது வார்டு காந்தி நகரில், பக்கீர் முஹமது பாத்திமா பர்ஹானா என்பவர் வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணி முடிவடையாத நிலையில் கடந்த, 29ல் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது.
அப்பகுதியினர் வார்டு கவுன்சிலர் சந்திர குமார் (அ.தி.மு.க.,) பணம் பெற்று, இணைப்பு கொடுத்ததாக குற்றம் சாட்டினர். குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று கவுன்சிலர் சந்திரகுமார் பர்வையிட்டார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த, 3ம் தேதி இரவு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலர் சந்திரகுமார் (அ.தி.மு.க.,) கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த ராஜராஜன் என்பவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மூலம், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து குடிநீர் இணைப்பு கொடுக்க வைத்துள்ளார். எதிர்ப்பு ஏற்படுவது தெரிந்து, மின் வாரியத்தினர் அதனை மாற்றவில்லை, என்றார். '
செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரிடம் கேட்டபோது, வீட்டிற்கு ரூபிங் கான்கிரீட் (மேற்கூரை) போட்டால், வரி போடலாம். வீடு வேலை முழுமையாக முடியவேண்டியதில்லை, என்றார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் கூறுகையில், இணைப்பு வழங்க நான் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. எதுவும் கூறவில்லை, என்றார்.
இப்பேரூராட்சியில் வீடு கட்டி முடித்த பலர், நீண்ட காலமாக குடிநீர் இணைப்பிற்கு காத்திருக்கும் நிலையில், கட்டி முடிக்கப்படாத வீட்டிற்கு இணைப்பு கொடுத்தது, மீதமுள்ளோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.