/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பணைகள் கட்டாமல் முறைகேடு: உதவி திட்ட அலுவலர் கள ஆய்வு
/
தடுப்பணைகள் கட்டாமல் முறைகேடு: உதவி திட்ட அலுவலர் கள ஆய்வு
தடுப்பணைகள் கட்டாமல் முறைகேடு: உதவி திட்ட அலுவலர் கள ஆய்வு
தடுப்பணைகள் கட்டாமல் முறைகேடு: உதவி திட்ட அலுவலர் கள ஆய்வு
ADDED : ஜன 09, 2024 12:16 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தடுப்பணைகள் கட்டாமல் நிதி முறைகேடுகள் செய்து இருப்பதை விசாரித்து, அறிக்கை சமர்பிக்கும் வகையில் நேற்று முதல் ஆய்வு துவங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, ராமபட்டிணம் ஊராட்சியில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டாமல் நிதி முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
உடனே, சிமென்ட் மூட்டைக்காக எடுத்த தொகை, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 750 ரூபாய், வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கியதாக எழுதிய தொகை, 52 ஆயிரத்து 962 ரூபாய், பொள்ளாச்சி ஒன்றிய அலுவலக வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த செந்தில்குமார், ராமபட்டிணம் ஊராட்சியில் செடிமுத்துார் கிராமத்தில் ஓடையின் குறுக்கே நாகராஜ் தோட்டம் மற்றும் நித்தியானந்தம் தோட்டம் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டாமல் கையாடல் செய்து இருப்பதாக புகார் கொடுத்தார்.
இதுகுறித்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்து, கையாடல் செய்து இருப்பது உறுதி என, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்தார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரான கூடுதல் கலெக்டர் ஸ்வேதாவிடம் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்பிக்க உதவி திட்ட அலுவலர் ஜெகநாதனுக்கு உத்தரவிடப்பட்டது.
ராமபட்டிணம் ஊராட்சியில், நேற்று உதவி திட்ட அலுவலர் ஜெகநாதன் கள ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், ''ராமபட்டிணம் ஊராட்சியில் நேற்று முதல் கள ஆய்வு துவங்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் ஆய்வு செய்த பின் முழு விபரமும் தெரிவிக்கப்படும்,'' என்றார்.