/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூர் சிவன் கோவில் திருப்பணிகள் சுணக்கம்; 15 ஆண்டுகளாக நடப்பதால் பக்தர்கள் வேதனை
/
இருகூர் சிவன் கோவில் திருப்பணிகள் சுணக்கம்; 15 ஆண்டுகளாக நடப்பதால் பக்தர்கள் வேதனை
இருகூர் சிவன் கோவில் திருப்பணிகள் சுணக்கம்; 15 ஆண்டுகளாக நடப்பதால் பக்தர்கள் வேதனை
இருகூர் சிவன் கோவில் திருப்பணிகள் சுணக்கம்; 15 ஆண்டுகளாக நடப்பதால் பக்தர்கள் வேதனை
ADDED : செப் 12, 2025 10:05 PM

சூலுார்; 15 ஆண்டுகள் கடந்தும் இருகூர் சிவன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெறாததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இருகூர் பேரூராட்சி சுங்கம் அருகில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உள்ளன.
மேற்கு திசை பார்த்து சிவபெருமான் அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாக கருத்தப்படுகிறது. இங்கு, சிவபெருமானுக்கு உரிய சிவராத்திரி, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
அதேபோல், இக்கோவிலில் நடக்கும் சூரசம்ஹார விழாவும் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் திருப்பணிகள் செய்யும் பணி துவங்கியது. அதற்காக, பாலாலாயம் அமைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. பணிகள் துவங்கி, 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவு பெறாததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இருகூரை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:
சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள், 15 ஆண்டுகளாக நடப்பது வேதனை அளிக்கிறது. ஒரு தலைமுறையே பண்டிகை, விழாக்களை மறந்து விட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றுக்கு உடனடி தீர்வு கண்டு, கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும். அதற்கு, உள்ளூர் பிரமுகர்களும் ஊர் நலன் கருதி, முயற்சி எடுக்க வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.