/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஞாபக மறதி வரமா, சாபமா பட்டிமன்றத்தில் தீர்ப்பு
/
ஞாபக மறதி வரமா, சாபமா பட்டிமன்றத்தில் தீர்ப்பு
ADDED : நவ 18, 2025 04:41 AM

கோவை: கோயம்புத்தூர் விழாவில் நடந்த சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவையின் பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் விழா மற்றும் கோவை நகைச்சுவை சங்கம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், எஸ்.என்.ஆர். அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
'ஞாபக மறதி நமக்கு வரமே! சாபமே!' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்துக்யகு, பிரபல பட்டிமன்ற நடுவர் ராஜா நடுவராக செயல்பட்டார். பட்டிமன்ற பேச்சாளர்கள் மாது, கவிதா ஜவஹர், யோகேஷ் குமார், பாரதி பாஸ்கர், சதீஷ்குமார், ஹேமவர்த்தினி ஆகியோர் அடங்கிய குழுவினர், தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.
இருதரப்பினரின் நகைச்சுவை ததும்பிய வாதங்களும், எதிர்வாதங்களும், சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தன. பட்டிமன்றத்தின் நிறைவில், 'மனிதன் தன்நிலை மறந்தால், அது சாபமே என்பதால், மறதி சாபமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற திருக்குறளை முன்னுதாரணமாக கூறி, ஞாபக மறதி ஒரு வரமே' என்பதை ஆதரித்து நடுவர் ராஜா தீர்ப்பளித்தார். ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

