/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதற்கு மக்களை வதைப்பது சரியா? இனியாவது போக்குவரத்து போலீசார் யோசிப்பார்களா
/
அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதற்கு மக்களை வதைப்பது சரியா? இனியாவது போக்குவரத்து போலீசார் யோசிப்பார்களா
அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதற்கு மக்களை வதைப்பது சரியா? இனியாவது போக்குவரத்து போலீசார் யோசிப்பார்களா
அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதற்கு மக்களை வதைப்பது சரியா? இனியாவது போக்குவரத்து போலீசார் யோசிப்பார்களா
UPDATED : நவ 21, 2025 05:48 AM
ADDED : நவ 21, 2025 05:39 AM

கோவை: ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சியினர் கோவையில் நடத்தும் போராட்டங்களினால் மக்கள் வதைக்கப்படுகின்றனர். மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இதுபோன்ற போராட்டங்களை நகர்ப்பகுதியில் நடத்த இனி வரும் காலங்களில் காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது.
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 1,250 பெண்கள் உட்பட, 2,500 பேர் பங்கேற்றனர். இவர்களுக்காக, செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் இருந்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் வரையிலான ரோடு மறிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்துக்கு இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. இருபுறமும் போலீசார் நின்று, வாகனங்களை மாற்று வழிகளில் திருப்பி விட்டனர்.
ரேஸ்கோர்ஸ் மற்றும் அரசு கலை கல்லுாரி ரோட்டில் இருந்து ஒசூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், உப்பிலிபாளையம் சென்று ரவுண்டானா சுற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஒசூர் ரோடு வழியாக எல்.ஐ.சி., சந்திப்பு வந்து காந்திபுரம் செல்ல முடியவில்லை. அனைத்து வழித்தடங்களில் வந்த வாகனங்களும் உப்பிலிபாளையம் சந்திப்புக்குச் சென்று திரும்ப வேண்டியிருந்ததால், அவ்விடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கு ரேஸ்கோர்ஸ் செஞ்சிலுவை சங்கம், டாடாபாத் பவர் ஹவுஸ் மற்றும் உக்கடம் பேக்கரி அருகே போலீஸ் தரப்பில் அனுமதி தரப்படுகிறது. இவ்விடங்கள் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படுபவை. போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ்கள் ஆங்காங்கே தேங்கி விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வேலைக்குச் செல்லவோ, வீட்டுக்குத் திரும்பி வருவதற்கோ சரியான நேரத்துக்கு பஸ்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகின்றனர். சில நேரங்களில் நடந்தே வீட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை நினைத்துப் பார்த்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களை புறநகர் பகுதிகளாக தேர்வு செய்ய வேண்டும். மக்களுக்கு தொந்தரவு இல்லாத இடங்களையே போக்குவரத்து போலீசார் ஒதுக்க வேண்டும். இனியாவது இவ்விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். இல்லையெனில், போலீஸ் மீது மட்டுமின்றி ஆளுங்கட்சியினர் மீதுதான் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.

