/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா
/
ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா
ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா
ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா
ADDED : டிச 23, 2025 05:08 AM

நடைப்பயிற்சிக்கு இடையூறு ரேஸ்கோர்ஸ் நடைபாதையோரம் சிலர் வாகனங்கள் நிறுத்துவதால், நடைப்பயிற்சி மேற்கொள்ள இடையூறாக உள்ளது. காலை முதல் மாலை வரை, மணிக்கணக்கில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். நடைபாதையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
- ராஜா: புதர்மண்டிய பூங்கா வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சிறுவர் பூங்கா பராமரிப்பின்றியுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ளது.
- கார்த்திக்: துரத்தும் நாய்கள் சின்னவேடம்பட்டி, இட்டேரி வீதி, லட்சுமி நகரில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
- மாதேஸ்வரன்: தடுக்கி விழுகிறோம் அவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகே, 83வது வார்டு, நடைபாதை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. நடைபாதை முழுவதும் பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளன. நடந்து செல்வோர் தடுக்கி விழுகின்றனர்.
- பாலகிருஷ்ணன்: அடிக்கடி விபத்து ஒண்டிப்புதுார், சூர்யா நகர் ரயில்வே கிராசிங் செல்லும் ரோடு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
- நாராயணன்: கடும் துர்நாற்றம் போத்தனுார், தாயம்மாள் லே - அவுட், உழவர் சந்தை கேட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
- பழனிச்சாமி: பெரிய பள்ளங்கள் காளப்பட்டி, அசோக் நகர், சேரன் அவென்யூ, நாராயணா லே-அவுட், பேஸ் - 4 பகுதியில் சாலையின் பல இடங்களில் தார் பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பழுதான சாலையை விரைந்து சீர் செய்ய வேண்டும்.
- நாராயணா: ஒரு வருடமாக கசியும் நீர் சிட்கோ, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்துவருகிறது. கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு முறை தண்ணீர் விநியோகத்தின் போதும் கசிவு ஏற்படுகிறது. பலமுறை புகார் செய்தும் குழாய் உடைப்பு சரிசெய்யவில்லை.
- சரவணன்: சாலையில் நெருக்கடி மதுக்கரை ரோடு, பி.ஓ.பி. வங்கி காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள சிறிய சாலை குறுகியதாக உள்ளது. இதில், சாலையின் இருபுறம் பைக், கார், வேன் போன்ற வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்துசெல்கின்றனர்.
- நவீன்: இடிந்த சாக்கடை பீளமேடு, காக்கவல்லார் வீதியில் சாலையோரம் சாக்கடை கால்வாய் இடிந்துள்ளது. சாலையோரம் வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விழுகின்றனர். இடிந்த சாக்கடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- பாலகிருஷ்ணா:

