தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இட மாற்றம் வெறும் கண்துடைப்பா?

இட மாற்றம் வெறும் கண்துடைப்பா?

இட மாற்றம் வெறும் கண்துடைப்பா?


UPDATED : ஜூலை 30, 2026 03:55 PM

ADDED : ஜூலை 30, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 03:55 PM ADDED : ஜூலை 30, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:மாநகராட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவு மிகவும் முக்கியமானது. ரோடு போடுவது, மழைநீர் வடிகால் கட்டுவது, பூங்கா அமைப்பது போன்ற கட்டமைப்பு பணிகளை கவனிப்பது இந்த பிரிவினர்.

கோவையில் 100 வார்டுகள் உள்ளன. ஆனால் உதவி செயற்பொறியாளர் 3, உதவி பொறியாளர் 24, இளம்பொறியாளர் 8 என்று 35 பேர் தான் உள்ளனர். இது போதாது. பழைய ஆட்சி காலங்களில் அனுபவம் இல்லாத ஆட்களுக்கு உதவி பொறியாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனால் பல தவறுகளும், முறைகேடுகளும் நடந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரோடு போடுவது, ஸ்மார்ட் சிட்டி பணிகள், பூங்கா கட்டுமானம் ஆகியவற்றில் தரம் இல்லை. திட்ட செலவு மதிப்பீடை அதிகமாக காட்டி பலர் முறைகேடு செய்தனர். அந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக இப்போது வெளியே வருகிறது” என்றார் அவர்.

நீண்ட காலம் ஒரே இடத்தில் வேலை செய்ய அனுமதிப்பதே பல தவறுகளுக்கு ஆரம்பம் என்று அவர் சொன்னார். “கடந்த ஆண்டு உதவி மற்றும் இளம் பொறியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். த.வெ.க. ஆட்சி வந்ததும் அதே போல நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் பொறியாளர்கள் கோவை மாநகராட்சி மண்டலங்களுக்கு உள்ளேயே மாற்றப்பட்டுள்ளனர். இதனால் எந்த பலனும் இல்லை. பழைய தவறுகள் தொடர்வதற்கே வாய்ப்புள்ளது” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us