/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவல் துறை இருக்கிறதா? தலைவர்கள் கண்டனம்
/
காவல் துறை இருக்கிறதா? தலைவர்கள் கண்டனம்
ADDED : நவ 04, 2025 12:41 AM
காவல் துறை இருக்கிறதா? தமிழகத்தில் காவல் துறை என ஒன்று உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண்கள் பாது காப்பை குழிதோண்டி புதைத்து விட்டது தி.மு.க., அரசு. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது. தி.மு.க., அரசு, பெண்களை பாதுகாக்கும் என நம்ப வேண்டாம் என்று, சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., சார்பில், கண்களில் 'பெப்பர் ஸ்பிரே' அடிக்கும் கருவி, 'டார்ச்' உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கினோம். தி.மு.க., ஆட்சியில், பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கோவையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கி தர வேண்டும். பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர் மனித மிருகங்கள் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். கோவையில் மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். அன்புமணி, பா.ம.க., தலைவர்

