தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீர்வு கிடைக்குமா? ‘கார் பார்க்கிங்’ பணி இழுபறி

தீர்வு கிடைக்குமா? ‘கார் பார்க்கிங்’ பணி இழுபறி

தீர்வு கிடைக்குமா? ‘கார் பார்க்கிங்’ பணி இழுபறி


UPDATED : நவ 17, 2026 06:04 PM

ADDED : நவ 17, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:04 PM ADDED : நவ 17, 2026 06:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், ‘கார் பார்க்கிங்’ அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

வால்பாறை நகரில் உள்ள நகராட்சி திடல் இடிக்கப்பட்டு, சுற்றுலா வாகனங்கள் நிறுத்த வசதியாக, ‘கார் பார்க்கிங்’ மற்றும் ஸ்டேடியம் கட்டும் பணி, கடந்த ஆறு மாத்திற்கு முன் துவங்கப்பட்டது.

ஒரு கோடியே, 84 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணி நடக்கிறது. ஆனால், எட்டு மாதம் நிறைவடைந்த நிலையிலும் பணி நிறைவடையாததால் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் கவலையில் உள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், தங்களது வாகனங்களை நிறுத்த வசதியாக ஸ்டேடியத்துடன் கூடிய ‘கார் பார்க்கிங்’ கட்டும் பணி பல மாதங்களாக நடக்கிறது. ஆமை வேகத்தில் பணி நடப்பதால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

வால்பாறை நகரில் வாகன நெரிசலை தவிர்க்க, கார் பார்க்கிங் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ‘கார் பார்க்கிங் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு கலையரங்கம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது. இந்த பணி நிறைவடைந்த பின், சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக பார்க்கிங் திறக்கப்படும்,’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us