sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இதென்ன பஸ் ஸ்டாண்டா, கடை தெருவா? பஸ்கள் நிறுத்தும் பகுதியில் கடைவிரிப்பு ;ஆளுங்கட்சியினரை கவனிப்பதால் துணிச்சல்

/

இதென்ன பஸ் ஸ்டாண்டா, கடை தெருவா? பஸ்கள் நிறுத்தும் பகுதியில் கடைவிரிப்பு ;ஆளுங்கட்சியினரை கவனிப்பதால் துணிச்சல்

இதென்ன பஸ் ஸ்டாண்டா, கடை தெருவா? பஸ்கள் நிறுத்தும் பகுதியில் கடைவிரிப்பு ;ஆளுங்கட்சியினரை கவனிப்பதால் துணிச்சல்

இதென்ன பஸ் ஸ்டாண்டா, கடை தெருவா? பஸ்கள் நிறுத்தும் பகுதியில் கடைவிரிப்பு ;ஆளுங்கட்சியினரை கவனிப்பதால் துணிச்சல்

2


ADDED : ஜன 20, 2024 12:08 AM

Google News

ADDED : ஜன 20, 2024 12:08 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தப் பகுதியில், 'ெஷட்' அமைத்து துணிச்சலாக ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதன் பின்னணியில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் இருப்பதால், நகராட்சி அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பொள்ளாச்சி நகராட்சி தலைவராக சியாமளா உள்ளார். நகராட்சியில், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர், கோவை, பழநி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், புது பஸ்ஸ்டாண்டில், கிராமப்புறங்கள் மற்றும் வால்பாறை, கேரளா மாநிலம் செல்லும் பஸ்களும் நிறுத்தி இயக்கப்படுகின்றன.

இந்த இரண்டு பஸ் ஸ்டாண்ட்கள் முன் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. சுரங்கபாதை முதல், பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதிகள் வரை ஆக்கிரமித்து கடைகள் விரிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி, பஸ் ஸ்டாண்டில் பயணியர் இருக்கை, காத்திருக்கும் பகுதியிலும் கடைகள் அதிகளவு முளைத்துள்ளன. அவ்வப்போது அதிகாரிகள், கண்துடைப்பு நடவடிக்கை எடுப்பதும், ஒரு சில நாட்களிலேயே கடைகள் மீண்டும் அமைப்பதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இதுவரை, பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தவர்கள் தற்போது, பஸ் நிறுத்தப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

திருப்பூர் உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்பகுதியில், அடிக்கடி 'ெஷட்' அமைத்து அங்கேயே கடையை விரிக்கின்றனர். இதனால், ரேக் பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படாமல் மையப்பகுதிலேயே நிறுத்தப்படுகின்றன. மற்ற பஸ்களும் வரிசை கட்டி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதேபோன்று, பஸ் ஸ்டாண்டில் வாடகை அடிப்படையில் உள்ள கடைளும், கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தப்பகுதியில் துணிச்சலாக கடைகளை விரித்து வியாபாரம் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும், பஸ் நிறுத்த இடம் இல்லாமல் கடைகள் அமைக்கும் பகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மக்கள் காத்திருக்கும் பகுதி முழுவதும் கடைகள் வைத்திருந்தனர். தற்போது, பஸ்கள் நிறுத்தும் 'ரேக்' பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் கண்டும் காணாமல் உள்ளனர்.

பஸ் ஸ்டாண்ட் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பாளர்களிடம் கேள்வி எழுப்பினால், 'கவனிக்க வேண்டியவர்களை கவனிச்சாச்சு; எங்கு, யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்க, கடையை அகற்ற முடியாது,' என்று பதிலளிக்கின்றனர்.

ஆளுங்கட்சியினர் தலையீட்டால் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். தற்போதைய சூழலில், யார் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் கடைகளை அமைத்துக்கொள்ளலாம் என்ற சூழலே உள்ளது.

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பார்கள். ஆனால், பொள்ளாச்சியில் ஆட்சி மாறியதும், இது போன்று ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'தி.மு.க.,வினர் காய்ந்து கிடக்கின்றனர். ஆட்சியை ஒப்படைத்து விடாதீர்கள்' என்றார். தற்போது, அவர் பேசியது போன்றே உள்ளது.

இவ்வாறு, கூறினர்.

அதிகாரம் கொடுத்தது யார்?

பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் முகப்பு மற்றும் உள் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த கடைகளுக்கு அனுமதி அளித்தது யார் என்பது புரியாத புதிராக உள்ளது.தள்ளுவண்டி கடைகள், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் தினமும் அல்லது மாத அடிப்படையில், ஆளுங்கட்சி பிரமுகருக்கு, 'கவனிப்பு' செய்வதாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்காத கடைகளை நகராட்சி அதிகாரிகள் வாயிலாக அகற்றுவதும், 'கப்பம்' செலுத்தியதும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிப்பதும் வாடிக்கையாகி விட்டது.இதனால், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பட்டா மட்டுமே வழங்கவில்லை. அந்தளவுக்கு அந்த கடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கடையிலும் மாமூல் வசூலிக்க ஆளுங்கட்சி பிரமுகர், ஆள் ஒருவரை நியமித்துள்ளதாக கட்சி வட்டாரங்களே தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us