UPDATED : அக் 07, 2026 04:56 PM
ADDED : அக் 07, 2026 04:14 PM

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை ரோட்டில் ஓவர் லோடு ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், டிப்பர் லாரி, சரக்கு வாகனங்களின் வேகம் அதிகம் உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வெளி மாநில பதிவு எண் கொண்ட சிறிய சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பொருட்களை பாரம் ஏற்றி கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படுகின்றன.
மேலும், சரக்கு வாகனத்தில் கட்டப்பட்டிருந்த பொருட்கள் சற்று சாய்ந்து காணப்பட்டதால், பைக் ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணித்தனர். இது போன்று, விதிமுறை மீறி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
