/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
21ல் 'ஈஷா கிராமோத்சவம்' இறுதிப்போட்டி; மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு
/
21ல் 'ஈஷா கிராமோத்சவம்' இறுதிப்போட்டி; மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு
21ல் 'ஈஷா கிராமோத்சவம்' இறுதிப்போட்டி; மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு
21ல் 'ஈஷா கிராமோத்சவம்' இறுதிப்போட்டி; மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 18, 2025 10:29 PM

கோவை: ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டி, கோவை ஆதியோகி வளாகத்தில், 21ல், சத்குரு முன்னிலையில் நடக்கிறது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஈஷா தன்னார்வலர் மரபின் மைந்தன் முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:
ஈஷா கிராமோத்சவம்-- 2025' விளையாட்டு போட்டி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஒடிசா உட்பட 6 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது. ஆக., 16ல் துவங்கிய போட்டி, 183 இடங்களில் நடந்தது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் வாயிலாக, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் பங்கேற்றனர்.
ஆறு மாநிலங்களுக்கு இடையே மூன்றாம் கட்ட இறுதிப்போட்டி, 21ம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடக்கிறது. 24 வாலிபால் அணிகள், 18 த்ரோபால் அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதி போட்டிகள், 19, 20ல் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து போட்டியும் நடக்கிறது.
முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே, ஐந்து லட்சம், 3 லட்சம், ஒரு லட்சம், 50 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன. கோலப்போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு, சத்குருவிடம் இருந்து 33 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற வாய்ப்புள்ளது. கலந்துகொள்ளும் அனைவருக்கும், ஒரு புடவை பரிசாக வழங்கப்படும்.
சிறப்பு விருந்தினர்களாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண் டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை 'கிராண்ட் மாஸ்டர்' வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோ ர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.