/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., சிறப்பு அரங்கில் விளக்கம்
/
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., சிறப்பு அரங்கில் விளக்கம்
ADDED : ஆக 25, 2024 10:30 PM

கோவை:கோவை கொடிசியா அருகே, இஸ்கான் ஸ்ரீ ஜெகந்நாத் மந்திர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக நடந்து வருகிறது.
இதையொட்டி, கடந்த 24ம் தேதி முதல் பல்வேறு நிகழ்சிகள் நடந்து வருகின்றன. இதில், கோவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சார்பில், சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலக தெற்கு பிராந்திய மேலாளர் சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில், ஆண்டுக்கு 7.25 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி தரும் 444 நாட்கள் கொண்ட அமிர்த விருஷ்டி வைப்பு திட்டம், 90 சதவீதம் வரை கார் கடன், விரைவான வீட்டுக் கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட் உடனடி தனிநபர் கடன், ரூ.1.5 கோடி வரை கல்விக் கடன், குறைந்த வட்டியில் நகைக்கடன், பென்சன் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
இன்றுடன் நிறைவு பெறும் கண்காட்சியில், டெபாசிட் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.