/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் வசதிகளை சரியாக பயன்படுத்துவது நல்லது
/
கூடுதல் வசதிகளை சரியாக பயன்படுத்துவது நல்லது
ADDED : பிப் 17, 2024 02:15 AM
ஒரு வீட்டைக் கட்டும் போது அல்லது ஒரு டெவலப்பர் கட்டடம் கட்டும் போது நீங்கள் எவ்வளவு பகுதியைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை, அவரே தீர்மானிக்க முடியாது.
குறிப்பாக, அடித்தள பகுதி, மின் அறை, காவலர் அறை, மோட்டார் அறை, மாடிப்படி அறை போன்றவை எப்.எஸ்.ஐ., விதிகளுக்கு அப்பாற்ப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக, இவற்றின் பெயரில் பெரிய அறைகள் கட்டி பயன்படுத்த முடியாது.
அடித்தள பகுதி பெரும்பாலும், வாகன நிறுத்துமிடமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒரு காலனியிலோ அல்லது நீங்கள் கட்டப்பட்ட, வீடுகளை வைத்திருக்கும் ஒரு பகுதியிலோ வசிக்கிறீர்கள் என்றால், அனுமதிக்கப்பட்ட தரைப் பரப்பளவு விகிதத்தை அதிகரிப்பது உங்கள் சொத்தின் மதிப்பை அதிகரிக்கும்.
இதை முறையாக பயன்படுத்துவது அவசியம். இதை தவறாக பயன்படுத்தினால் அது விதிமீறல் புகாராக பதிவு செய்யப்பட்டு கட்டடத்துக்கு சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே புதிய வீடு வாங்குவோர், கட்டுனர், விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் கூடுதல் வசதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.