/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாவது முனையமாக மாறும் போத்தனுாருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது கட்டாயம் அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : அக் 30, 2024 09:20 PM
கோவை; போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வேகமாக மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல, கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'அமிர்த் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 554 ரயில்வே ஸ்டேஷன்கள் மறு சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்துக்குட்பட்ட எட்டு ரயில்வே ஸ்டேஷன்களில், பணிகள் நடந்து வருகின்றன.
இதில், கோவை போத்தனுார் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களில் மறுசீரமைப்பு பணிகள், 60 சதவீதம் முடிவடைந்துள்ளன. கோவையின் தெற்கு பகுதியில் உள்ள போத்தனுார், வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ரயில்வே மறுசீரமைப்பு பெரிதும் உதவக்கூடிய ஒன்றாக உள்ளது.
கோவையில் இரண்டாவது முனையமாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற உள்ளதால், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.
இதன் காரணமாக, நகரின் மையப்பகுதிகளில் இருந்து போத்தனுார் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைக்கருத்தில் கொண்டு, அப்பகுதிக்கு பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, போக்குவரத்து துறை இப்போதே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், ''ரயில்வே துறையிடம் நாம் தொடர்ந்து பல கோரிக்கைகள் வைத்து வருகிறோம். கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ரயில்வே நிர்வாகமும், பல ரயில்களை இயக்கி வருகிறது.
கோவை மற்றும் போத்தனூர் வழியாக, செல்லும் ரயில்கள் கோவை மற்றும் போத்தனூரில் நிறுத்தப்படுகின்றன. வருங்காலங்களில் பிரதான ரயில்கள், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், நின்று செல்லவும் வாய்ப்புள்ளது. அதற்கேற்றார் போல், பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும்,'' என்றார்.