/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டி வைப்பது அவசியம்; பண்ணையாளர்களுக்கு அறிவுரை
/
கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டி வைப்பது அவசியம்; பண்ணையாளர்களுக்கு அறிவுரை
கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டி வைப்பது அவசியம்; பண்ணையாளர்களுக்கு அறிவுரை
கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டி வைப்பது அவசியம்; பண்ணையாளர்களுக்கு அறிவுரை
ADDED : மே 14, 2025 11:47 PM
பெ.நா.பாளையம்; கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டிகளின் பயன்பாடு குறித்து, கால்நடை பராமரிப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.
கால்நடைகள் உயிர் வாழ இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள், நீர், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை ஆகும்.
இவை கால்நடைகளுக்கு நாம் அளிக்கும் கலப்பு தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் வாயிலாக கிடைக்கப் பெறுகின்றன. தாது உப்பு கட்டிகள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தாது உப்பு கலவையை நிர்ணயிக்கப்பட்ட அளவில் கலந்து, கட்டிகளாக மாற்றி, கால்நடை கொட்டகைகளில் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்படி வைத்திருப்பது ஆகும்.
தாது உப்பு குறைபாடு மிகவும் சிறிய அளவில் உள்ள போது, கால்நடைகள், குறைபாட்டுக்கான அறிகுறி ஏதுமின்றி, ஆரோக்கியமானதாகவே காணப்படும். ஆனால், குறைந்த செயல்பாடு மற்றும் குறைந்த உற்பத்தி திறன், பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.
கலப்பு தீவன தயாரிப்பாளர்கள் தாது உப்பு கலவை கலந்து அளித்தாலும், கால்நடை பண்ணையாளர்கள், கால்நடை கொட்டகையில் தாது உப்பு கட்டிகளை தொங்க விடுவது நல்லது.
கால்நடைகள், தாது உப்பு குறைபாடு உள்ளது போல் தோன்றினால், அவை தாமாகவே சென்று கட்டிகளில் இருந்து, தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும். எனவே, அதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக, தாது உப்பு கட்டிகள் தொங்க விடுதல் அவசியம். தாது உப்பு கட்டிகளை கொட்டகையின் நடுவில் தொங்கவிட்டோ அல்லது சுவரில் நிலையாக அமைத்தோ கிடைக்கும் படி செய்யலாம்.
கால்நடைகள் தாது உப்பு கட்டிகளை அதிகம் எடுத்துக்கொண்டு, அதனால் நச்சுத்தன்மை ஏற்பட்டு விடுமோ என்று பண்ணையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடானது தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இருக்கும் என, கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.